Local

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

இலங்கையில் ஏப்ரல் 18 முதல் 22 ஆம் திகதிவரையான 5 நாட்களுக்குள் 92 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன், வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்திலும் ‘கொரோனா’ தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் இன்று (23) இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியில் 368 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இன்று மாத்திரம் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெலிசரை கடற்படை முகாமில் உள்ள இலங்கை கடற்படையின் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை தொடர்ந்து 29 சிப்பாய்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றாளர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 107 பேர் குணமடைந்துள்ளனர். 254 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading