இலங்கையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள்!
இந்த வருடம் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
டிசம்பர் மாத நடுப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 197,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், ஒரு நாளைக்கு சுமார் 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment.