முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி 100 ஆவது வயதில் காலமானார்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவரது வயது 100.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இன்று ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் இறந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.
மேலும், கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி கார்ட்டர் வென்றார்.
ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.