Local

இலங்கையில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழப்பு!

 

இலங்கையில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

எப்பாவிலவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் அதுல தம்மிக்க (34) என்பவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்துள்ளார்.

மற்றவர் எல்.ஜி. விஜேசிங்க (38) தனது வயலில் புல் அறுத்தபோது வெப்பம் தாங்காமல் இறந்துள்ளார்.

இந்த இரு மரணங்கள் தொடர்பாக இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அதிர்ச்சி மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக இருவரும் உயிரிழந்ததாக மரண விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading