இலங்கையில் இன்று கருப்பு ஞாயிறு போராட்டம்!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று இலங்கை முழுவதும் கருப்பு ஞாயிறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று காலை ஞாயிறு ஆராதனையின் பின்னர் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு ஆடைகளை அணிந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என கோரியும் தமது ஆர்ப்பாட்டத்தை கத்தோலிக்கர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கத்தோலிக்க சம்மேளனமும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இந்த உயிர்த்த ஞாயிறு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
