Local

இலங்கையில் இன்று திடீரென அதிகரித்த கொரோனா!

இலங்கையில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை பரிசோதனைமூலம் இன்று கண்டறியப்பட்டது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பின் வைக்கப்பட்டிருந்தவர்களில் 23 பேருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 593 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 265 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading