Cinema

நீங்கள் இல்லாமல் நான் இல்லை”ரஜினி உருக்கம்!

கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியத் திரையுலகில் அறிமுகமானாா்.

இந்தப் படம் 1975 ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. அதற்குப் பிறகே பல்வேறு இயக்குநர்களின் படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதையொட்டி ரஜினியின் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை சமூக வலைதளத்தில் மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
முன்னணி பிரபலங்கள் பலரும் தனக்கான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்ததையொட்டி, ரஜினி நன்றி தெரிவித்து வருகிறாா்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…

“என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading