Local

இலங்கையில் இன்று 772 பேருக்கு கொரோனா 5 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் - 4 பெண்கள் உட்பட 05 பேர் பலி!

Bookmark and Share

இலங்கையில் இன்று 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது மேலும் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கமைய, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், வக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், வெலிமட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும், பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் தும்மலசூரிய பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading