Local

இலங்கையில் இயற்கை அழகு சூழ்ந்த கிராமம் !

பனிபொழியும் கிழக்கு மலைநாட்டிற்கே பேரழகு சேர்க்கும் ஓர் தனிப்பகுதி!!!

Badulla highway இல் பயணிக்கும் போது கண்களை கவர்ந்திழுக்கும் இப்பகுதியை கொழும்பிலிருந்து சுமார் 5 மணி நேரத்தில் அடையலாம்.

Nature lovers இங்கு அதிகம் வருவதே அடர்ந்த மரங்களால் போர்த்தப்பட்ட இதன் nature secrets ஐ கண்டுகளிக்கத் தான்

கொள்ளை அழகாம் கொஸ்லந்தவின் முதல் விஷேடமே இலங்கையின் 2வது பெரிய நீர்வீழ்ச்சியான diyaluma falls!! தான்.

இக் கிராமத்து உணவிலும் கூட ஓர் தனியான கைவரிசை தான்.இவற்றைத் தாண்டி இங்கு ஓர் Amazing pool உங்களுக்காக காத்திருக்கிறது.

மலைநாட்டின் உச்சியி்ல் ஓர் மலர்ப்படுக்கையாக உள்ள இதனுள் மிதக்கும் போது கீழே பனிப்புகையின் இடையே தேயிலைத் தோட்டங்கள் ஓர் பச்சை ஓவியமாய் கண்களுக்கு விருந்தூட்டும்.

koslanda வின் மொத்த அழகையும் ஒரே பார்வையில் குறைந்த செலவில் கண்டுகளித்திட ரயில் பயணமே உகந்தது.

kandy to Ella ரயில் இதற்கு வசதியானது.அத்தோடு வரிசையாக Horton plains, haputale, Udawalawa, Yala போன்ற இடங்களிலும் சிறந்த பொழுதைக் கழிக்கும் வாய்ப்புண்டு.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading