Local

இலங்கையில் இருந்து அகதியாக சென்று சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன்!

இலங்கையில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி சங்கம் (National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற நிலையில், மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் உள்ள டெஸ்ரா மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இடம்பெற்ற அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருந்ததுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading