Local

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வு!

பேருவளை நகரில் இருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 1.02 மணியளவில், இடம்பெற்ற இந்த நில அதிர்வு, ரிச்டர் அளவில் 3.7 ஆக பதிவானதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

களுத்துறை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, பண்டாரகம ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, நில அதிர்வு ஏற்பட்ட போதிலும் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading