Local

இலங்கையில் உணவு தட்டுப்பாடா?

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதாக புகழ்பெற்ற சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்ற தகவல்களை தாம் நிராகரிப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். அத்துடன் இலங்கைக்கு எதிராக சில சர்வதேச நாடுகள் சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றதாகவும் அவர் விமர்சித்தார்.

இதேவேளை இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவிவருவதாக ரொய்ட்டர்ஸ் ஊடகமும் கடந்த 03ஆம் திகதி செய்தி பிரசுரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading