Local

இலங்கையில் உரம் தேவையை பூர்த்தி செய்ய 600 மில்லியன் டொலர்கள் தேவை!

நாட்டில் எதிர்கொள்ளப் போகும் உணவுப் பற்றாக்குறை குறித்து விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடினார்.

போதிய உரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது, வங்கிகள் டொலரை விடுவித்தால் உர நிறுவனங்களுக்கு தேவையான உர அளவுகளை வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயப் பொருட்களை தடையின்றி வழங்குவதையும் விநியோகிப்பதையும் உறுதி செய்யும் புதிய சட்டமான அத்தியாவசிய விவசாய விநியோகச் சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் இதன் போது பிரதமர் கூறினார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading