Local

இலங்கையில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் மீளத் திறக்க தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 27ஆம் திகதி மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த  திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன.

சுகாதார ஆலோசனைகளின் கீழ், திரையரங்குகளை நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாச்சார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
திரையரங்குகளை மீளத் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வழங்கியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி முதல், அனைத்து திரையரங்குகளும்  திறக்கப்படவுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading