Local

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்க செல்வதற்கான விஸா பெற்றுக்கொண்ட நிலையில், பயணத்தை மேற்கொள்ள முடியாது போனவர்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களினால் பயணத்தினை மேற்கொள்ள முடியாது போனவர்களை உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறு அறிவிக்கபட்டுள்ளது.

மேலும், ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading