இலங்கையில் உள்ள முச்சக்கர வண்டிகளை இலத்திரனியல் வண்டிகளாக மாற்ற ஜப்பான் திட்டம்?
இலங்கையில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளையும் இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வமாக உள்ளது.
ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோசி ஹிடீக்கி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இலத்திரனியல் அல்லது மின்சார வாகனங்களின் உற்பத்தி வேலைத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு ஜப்பானிய முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
தற்போது நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளையும் மின்சாரத்தில் இயங்கும் வகையிலும், வீட்டிலேயே அவற்றுக்கான மின்னேற்றும் பணிகளை மேற்கொள்ளும் வசதியை செய்துக் கொள்ளவும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
ஆனால் இதற்கான உகந்த சூழ்நிலை இலங்கையில் தற்போது இல்லை என்றும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
