Local

இலங்கையில் உள்ள மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் அதிரடி தடை!

பேஸ்புக்கில் இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது.

இதன்படி, இவ்வருடமும் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

பேஸ்புக் தமது வகைப்படுத்தலின் கீழ், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு இவ்வாறு தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டில் உள்ள பொதுபல சேனா அமைப்பு மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலும் எந்தவொரு பதிவையும் இடுவது பேஸ்புக்கினால் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறே, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும் தொடர்ந்தும் தடை விதித்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்புகளுக்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு மத்தியில் வெறுப்புப் பேச்சுகளை கொண்டுசெல்லுதல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை கருத்துக்களை பகிர்தல் என்றதன் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading