Local

இலங்கையில்  எந்நேரத்திலும் எதுவும் சாத்தியம் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

கொரோனா தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடான சீனாவில் , கொவிட் -19 தொற்றாளர்களின் அதிகரிப்பினால் பல நகரங்களில் முடக்கலை விரிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சானது சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்குமாறு இலங்கையர்களை வலியுறுத்தியுள்ளது.

இன்றும் கூட இலங்கையில் நாளொன்றுக்கு 400 புதிய தொற்றாளர்களும் குறைந்தது 10 இறப்புகளும் பதிவாகுவதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் கொவிட் -19 க்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

நாங்கள் உலகத்திலிருந்து அந்நியப்பட்ட தேசம் அல்ல. எந்த நேரத்திலும், எதுவும் சாத்தியமாகும், ஏனெனில் இது ஒரு புதிய பிறழ்வினால் ஏற்படக்கூடிய தொற்றாளர் அதிகரிப்பாக இருக்கிறது. தற்போது சீனாவால் விதிக்கப்படும் தடைகளின் ஊடாக இது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வைரஸின் அடிப்படையில் எதிர்காலத்தை எங்களால் கணிக்க முடியாவிட்டாலும், நாம் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தடுக்க, சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க நமது பங்கைச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading