Local

இலங்கையில் ஒரு செங்கல்லின் விலை 100 ரூபா!

ஒரு செங்கல்லின் விலை 100 ரூபாவிற்கு உயர்ந்துள்ளதாக்க இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.

மின்கட்டண உயர்வாலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாலும், சீமெந்து செங்கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இவ் மின்கட்டண உயர்வால் கட்டுமானத் தொழில் தொடர்பான அனைத்து தொழில்களும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அத்தொழிலில் பணிபுரியும் சுமார் 55 இலட்சம் பேரின் பொருளாதாம் கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறை 52 சதவீத பங்களிப்பை வழங்குவதாகவும், இந்த சிக்கலான சூழ்நிலையில் அரசு பெறும் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading