Local

இலங்கையில் கடனட்டை பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் வருடாந்த வட்டி வீதத்தை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

கட்ன் அட்டை  மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் 36% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த வங்கிகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 8 அன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத வரம்புகளை நீக்க முடிவு செய்தது.

அந்த முடிவிற்குப் பிறகு, அதுவரை 18% ஆக இருந்த கிரெடிட் கார்ட் வட்டி 24% ஆகவும் பின்னர் 30% ஆகவும் உயர்த்தப்பட்டது. இன்று அது 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான அதிக வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள பின்னணியில் கடன் அட்டைகளை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வர்த்தக வங்கிகள் மேலும் தெரிவிக்கின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading