Local

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வௌிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் சென்னையில் இருந்து வந்த இருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3360 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3208 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்ந்தும் 139 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading