Local

இலங்கையில் கொரோனா தொற்று தற்போதைய நிலைவரம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 436 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 419 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 667 குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 94 ஆயிரத்து 145 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 34 ஆயிரத்து 232 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 374 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading