Local

இலங்கையில் கொரோனா மரணங்கள் 2260ஆக அதிகரிப்பு!

நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் நாட்டில் 57 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.

25 பெண்களும் மற்றும் 32 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினத்தில் இதுவரை 2,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 225,897 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 190,464 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading