Local

இலங்கையில் கொரோனா மரணங்கள் 1400 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று (29) 2,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180,538 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 2,029 பேர் நேற்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 148,391 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading