Local

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 414 ஆக அதிகரிப்பு

வெசிறை கடற்படை முகாமில் கடமையாற்றிய மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இதன்படி மொத்தமாக 60 கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியதையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரசோதனைமூலம் மேலும் 29 கடற்படையினருக்கு வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது.
இந்நிலையிலேயே இன்று மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading