Local

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்

கொரோனாவின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள இராணுவத்தளபதி

கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். எனவே இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டவர்களிடம் இருந்து பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க 3496 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தனர். நேற்று அனுப்பப்பட்ட 37 பேர் 21 நாட்கள் இருந்து வெளியேறினர் .

இப்போது 1340 பேர் 12 நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடைசியாக வெளியேறிய 37 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை ஆராயும் ஆரம்பகட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

புத்தளம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 16 பேர் அக்குறணையில சிலர் அட்டுலுகம , பேருவளை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்டவர்கள் இந்த 1340 பேரில் உள்ளனர் .

அவர்களிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்போது அடையாளம் காணப்பட்டவர்களுடன் முதலாவது, இரண்டாவது ,மூன்றாவது தொடர்பாளர்களாக 48 ஆயிரத்து மூன்று பேர் வரை இருக்கலாமென அறியப்பட்டாலும் நாங்கள் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.

எனவே இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டவர்களிடம் இருந்து பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading