Local

இலங்கையில் கோவிட் வைரஸ் கிருமிகளை அழிக்கும் திரவம் கண்டுபிடிப்பு!

கோவிட் வைரஸ் கிருமிகளை அழிக்க நனோ தொழிநுட்ப முறையின் ஊடாக கிருமி தொற்று நீக்கி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் நிபுணர் திலான் ராஜபக்ஷ கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கிருமி தொற்று நீக்கி திரவத்தை பணப்பைகள், கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் பாடசாலை பைகள் போன்றவற்றின் மேற்பரப்பில் பயன்படுத்தலாம்.

குறித்த திரவத்தை ஒரு முறை விசிறினால் 90 நாட்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும்.
அதன் நுட்பமான செயல்திறன் காரணமாக, ஒரு முறை ஆடைகளுக்கு விசிறினால் பல வாரங்களுக்குச் செயலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading