Local

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா நேற்று மாத்திரம் 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நேற்று (27) இரவு 11.55 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 இலிருந்து 1,469 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம்  ஆகக் கூடுதலாக 137 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவ்வெண்ணிக்கையை கடந்து நேற்று ஒரே நாளில் 150பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,469 பேரில் தற்போது 727 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 732 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 75 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் – 1,469
குணமடைவு – 732
நேற்று அடையாளம் – 150
நேற்று குணமடைவு – 20
சிகிச்சையில் – 727
மரணம் – 10

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading