Local

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,158 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று (22) மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 556,975 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,110 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading