Local

இலங்கையில் சமூகத்திலிருந்து பதிவாகும் கொரோனா!

தற்போது பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் சமூகத்திலிருந்தே பதிவாவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு கண்டறியப்பட்ட 259 பேரில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்டறியப்பட்ட இருவரைத் தவிர ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வௌியிலேயே கண்டறியப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வௌியே தொற்றாளர்கள் கண்டறியப்படுவது சமூகத்திலிருந்தே கண்டறியப்படுவதாக புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
தற்போது உண்மை நிலை கண்டறியப்பட்டுள்ளமையினால் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவிற்கு மாத்திரம் இதனை கட்டுப்படுத்த முடியாது என வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டார்.

அத்துடன் மக்களுக்கு  வெளியிடப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகள் சமூகத்தில் உள்ள பாதுகாப்பற்ற நிலைமையையே காட்டுவதாக வைத்தியர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டினார்.

எனவே சமூகத்தின் மத்தியில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமலிருக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading