Local

இலங்கையில் சவப்பெட்டிகளின் விலை 2 மடங்காக அதிகரிப்பு!

இலங்கையில் சவப்பெட்டிகளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

 மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப் பெட்டியின் விலை தற்போது 60 ஆயிரம் ரூபாவரை அதிகரித்துள்ளது. 

அத்துடன், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

அதேசமயம் இறந்தவர்களின் சடலத்தை அஞ்சலிக்காக வைத்திருக்கும் போது பிஸ்கட், தேநீர், குளிர்பானங்கள், போன்றவற்றிற்காக செலவிடும் தொகையும் எகிறியுள்ளமை மக்களை திண்டாடத்தில் தள்ளியுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading