Local

இலங்கையில் சிகரெட் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி..!!

இலங்கையில் புகையிலை பொருட்கள் மீதான வரிகள் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டதன் காரணமாக, 2022 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சிகரெட் உற்பத்தி 32% வரை சரிவடைந்துள்ளதாக பொருளாதார வளர்ச்சி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசின் வரி கொள்கையால் 2022 இல் 2.8 பில்லியனாக இருந்த சிகரெட் உற்பத்தி 2025 இல் 1.9 பில்லியனாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 2023 முதல் கலால் வரி நான்கு முறை உயர்த்தப்பட்டதுடன், VAT வரி 18% ஆகவும், நிறுவன வருமான வரி 45% ஆகவும் அதிகரிக்கப்பட்டு, சிகரெட்டின் நீளத்திற்கு ஏற்ப ரூ. 26.59 முதல் ரூ. 109.95 வரை வரி விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அரசின் வருவாயைப் பெருக்குவதுடன், பொதுச்சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் புகையிலையால் ஏற்படும் சமூக-பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது என பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading