இலங்கையில் ஜனவரி முதல் வாகன இறக்குமதி?
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாகன இறக்குமதிகளுக்கு அனுமதியை வழங்குவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வரி அதிகரிப்பு குறித்த வதந்திகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றார்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது 600வீத வரி விதிக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியிருந்தன. அது பொய்யான செய்தி.
வாகன இறக்குமதிக்கு 600 வீத வரி விதிப்பதில் எந்த பயனும் இல்லை. வரியை உயர்த்தினால் எவரும் வாகனங்களை வாங்க மாட்டார்கள்.
வாகன இறக்குமதிகள் தொடங்கிய பின்னர் வழக்கத்திற்கு மாறாக வாகன விலைகள் குறையும் என்றும் சம்பத் மெரிஞ்சிகே கூறியுள்ளார்.

You must be logged in to post a comment.