இலங்கையில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாகவும் மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக உள்ளதாகவும் மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ள போதிலும் டெங்கு பரவும் அபாயம் முழுமையாக நீங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
”நாட்டின் ஏழு மாகாணங்கள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சுகாதாரத் துறையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் நுளம்புகள் தேங்கி நிற்கும் சுத்தமான நீரிலும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை என்பதால் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றுவது மிகவும் முக்கியமானது.டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்த அடிப்படையில் குறைந்திருந்தாலும், பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.” எனவும் வைத்திய நிபுணர் நவிந்த சொய்சா வலியுறுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment.