மருத்துவர் வேலையை உதறிவிட்டு உணவு டெலிவரிக்கு சென்ற இளம்பெண்!
சீனாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்த 31 வயது இளம் பெண் லியு ஜிஹான், கடுமையான பணிச்சுமை மற்றும் அழுத்தங்கள் காரணமாக தனது உயர் பதவியை துறந்து உணவு டெலிவரி செய்யும் வீலைக்கு சென்ற சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது.
மக்காவ் பல்கலைக்கழகத்தில் சுகாதார அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றினார்.

இருப்பினும், அங்குள்ள கடுமையான வேலை நேரமும் நெருக்கடிகளும் இவருக்கு மன அழுத்தத்தை கொடுத்தன. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் தனது வேலையை ராஜினாமா செய்த இவர், தற்போது உணவு விநியோகம் செய்யும் பணி, பாப் மேடைகளில் பாடுவது மற்றும் காலை உணவு விற்பது போன்ற எளிய மற்றும் நெகிழ்வான பகுதிநேர பணிகளை செய்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்த பெருமைமிகு வாழ்க்கையை காட்டிலும், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுடன் பழகும்போது கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சியும் சமூக உறவுமே தனக்கு திருப்தியளிப்பதாக அவர் கூறுகிறார்.
ஆரம்பத்தில் அவரது பெற்றோர் இந்த முடிவை கண்டு குழப்பமடைந்தாலும், தற்போது இவரது புதிய அனுபவங்களை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

You must be logged in to post a comment.