Local

இலங்கையில் தடுப்பூசியை செலுத்திய 49 பேர் உயிரிழப்பு!

கொரோனா தடுப்பூசியை செலுத்திய 49பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் இரு தடுப்பூசிகளை செலுத்திய 9 பேரும், ஒரு தடுப்பூசியை செலுத்திய 40பேரும் உயிரிழந்தாக மருத்துவர் அன்வர் ஹம்தானி சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.

இரு தடுப்பூசியையும் செலுத்தியவர்கள் உயிரிழந்தமைக்கு அவர்களுக்கு வேறுநோய்கள் இருந்தமை பரிசோதனையில் தெரிய வந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்ட 3524 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் கோவிட்தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாதவர்களென புள்ளிவிபரங்கள் தெரவிக்கின்றன.

கொரோனாவால் ஏற்பட்ட மரணங்களில் இது 70 வீதமென கருதப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading