Local

இலங்கையில் தந்தையை அடித்து கொன்ற மகன்!

பதுளை – கந்தகொல்ல பகுதியில் மகனால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் தமது மனைவியை மண்வெட்டியால், தாக்குவதற்கு முற்பட்ட தந்தையை, அவரது மகன் போத்தல் ஒன்றினால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காயமடைந்த தந்தை, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading