Local

இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துக்கு சிறந்த பெறுபேறு!

இலங்கையில் உள்ள கேகாலை தம்மிக்க பண்டார என்ற நபரினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து, ஓரளவு சிறந்த பெறுபேற்றை வழங்கியுள்ளதாக, வத்துப்பிட்டிவலை ஆரம்ப வைத்தியசாலையின் பொது சுகாதாரப் பிரிவின் வைத்தியர் தம்மிக குமார தெரிவித்துள்ளார்.

தமது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 143 கொரோனா தொற்றாளர்களின் அனுமதிக்கு இணங்க, குறித்த மருந்து வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையில், 10 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக , வைத்தியர் தம்மிக குமார சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நிலையில், குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் அனுமதிக்கு இணங்க, மேலும் 50 பேருக்கு குறித்த மருந்து வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த 50 பேரின் இரத்த மாதிரிகள், வைத்திய ஆராய்சி நிறுவகம் மற்றும் மஹரகமை வைத்தியசாலை என்பவற்றுக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும், வைத்திய ஆராய்ச்சி நிறுவகம், சில காரணிகளை அடிப்படையாக கொண்டு குறித்த மாதிரிகளை நிராகரித்ததாக, வைத்தியர் தம்மிக குமார குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மஹரகமை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த 32 பேரின் மாதிரிகளின் அடிப்படையில், 16 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாக, வைத்தியர் தம்மிக குமார மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading