Local

இலங்கையில் திடீரென அதிகரித்த கொரோனா வைரஸ் நோயாளிகள்

இலங்கையில் மேலும் 20 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,138 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 49 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 19 பேர் குவைத்தில் இருந்த வந்தவர்களாவர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் மேலும் 16 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதன்படி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

455 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading