Local

இலங்கையில் திடீரென 236 ரூபாவுக்கு குறைந்த டொலர்!

அமெரிக்க டொலரின் பெறுமதி திடீரென 100 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது.  இதன்படி, டொலரின் பெறுமதி 236.81 ரூபாவாக காணப்படுகின்றது.
அது மாத்திரமின்றி யூரோ, பவுண்ட், கனேடியன் டொலர், சுவிஸ் பிராங்க் ஆகியவையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி சிறிது அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய வங்கியின் தரவுப் படி டொலரின் இன்றைய பெறுமதி 336.01 ரூபாவாக காணப்படுகின்றது.
இதுவரையில் இலங்கை மத்திய வங்கியோ அல்லது ஏனைய வர்த்தக வங்கிகளோ நந்தனம்ஙஸவெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தொழிநுட்ப கோளாறு காரணமாக கூகுள் தரவுகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்ததை பின்பு அறியக்கூடியதாக இருந்தது.
  • எனினும், தற்போது மீண்டும் கூகுள் தரவு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் தற்போது ரூபாவின் பெறுமதி மீண்டும் பழைய தரவுகளின் படி காட்டுகின்றது.நவங

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading