Local

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் தொடர்ந்தும்  பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது,
இலங்கைக்கு பயணிக்கும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கான பயண அறிவித்தலில் இந்த விடயத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து மையங்கள், ஹோட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொது மக்கள் சஞ்சரிக்கும் இடங்களில் இந்த தாக்குதல் அபாயம் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது,

மேலும்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading