Local

இலங்கையில் நாடாளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று (20)  மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவிவருவதால் அதனை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இக்காலப்பகுதியில் பொலிஸாரும், சுகாதாரப்பிரிவினரும் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

அதேவேளை, புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை, ஜாஎல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று முற்பகல் 9 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading