இலங்கையில் நான்கு மாவட்டங்களில் இதுவரை எவரும் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்படவில்லை

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே இதுவரை கோரோனா தொற்றுள்ள எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் உள்பட ஏனைய 21 மாவடங்களிலும் கோரோனா தொற்றுள்ளோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று நண்பகல்வரை கோரோனா தொற்றுள்ள 622 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 50 சதவீதமான 311 பேர் கடந்த 22ஆம் திகதியிலிருந்து இன்றுவரை ஒருவாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
