Local

இலங்கையில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள்?

இலங்கையில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அத்தோடு இவ்வாறு மருத்துவர்களாக கடமையாற்றி வருவோரில் பெரும்பான்மையினர் சுதேச மருத்துவ அமைச்சிலோ அல்லது இலங்கை மருத்துவ பேரவையிலோ தங்களை பதிவு செய்து கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ சேவை பெற்றுக் கொள்ளும் நபர்கள் மருத்துவரின் பின்புலம் பற்றி தெரிந்து கொள்வது ஆபத்துக்களை தவிர்க்க உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading