Local

இலங்கையில் நாளாந்தம் 150 முதல் 200 கொரோனா மரணங்கள் ஏற்படும்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை காரணமாக மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் 150 முதல் 200 உடல்களை எரிக்கக்கூடிய ஒரு சுடுகாட்டை உருவாக்க வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா மாறுபாட்டிற்கு சவால் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டு பேராசிரியர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பேராசிரியர் சுதென் ரஜரட்ட பல்கலைக்கழத்தின் வைத்தின் பீட சமூக நோய்கள் பிரிவு பேராசிரியராக செயற்பட்டு வருகின்றார்.

அவர் ஒரு தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading