Local

இலங்கையில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவது குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

நாளை, 6ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை, நாடளாவிய ரீதியில், இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே அமுலில் இருக்கும்.

அதாவது 5 மணிநேர ஊரடங்கு. முன்னர் அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கில் இருந்து ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மாற்றமின்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச, தனியார துறையினர் தமது நிறுவனம் மற்றும் அலுவலகங்களை நடத்திச் செல்லும்போது, கொரோனா தடுப்புக்கான நாளாந்த வாழ்க்கை முறைக்கான வழிகாட்டல்களை முன்னர் போலவே முழுமையாகப் பின்பற்றுமாறு அனைத்து தரப்பினரிடமும் அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading