Local

இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை எப்போது நீக்கப்படும்?

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா MP கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சி பீடம் ஏறியது. சில வாக்குறுதிகள் முக்கியமானவை, சில வாக்குறுதிகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. நிறைவேற்று அதிகார முறை இல்லாது ஒழிப்பது குறித்த வாக்குறுதி மிகவும் முக்கியமானது

ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு முனைப்பையும் அரசாங்கத்திடம் காண முடியவில்லை. இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினாலும், அரசாங்கம் அதற்கு உரிய பதில்களை வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அளித்த 1333 வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகள் மிகவும் முதன்மையானவை. ஆட்சி அதிகாரம் தொடர்பிலும் பொருளாதாரம் தொடர்பிலும் அரசாங்கம் அளித்த வலுவான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது முக்கியமானது என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading