Local

இலங்கையில் நீருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

எதிர்வரும் நாட்களில் நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பதில் பொது முகாமையாளர் ஏகநாயக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், அத்தியாவசிய  தேவைகளுக்காக மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பதில் பொது முகாமையாளர்  ஏகநாயக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading