Local

இலங்கையில் நேற்றையதினம் கொரோனாவால் 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நேற்று (04) இரவு 11.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,790 இலிருந்து 1,797 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டவர்கள் இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் மற்றும் 06 கடற்படையினர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்கள், இந்தியாவிலிருந்து வந்த 03 பேர், பங்களாதேஷிலிருந்து வந்த 02 பேர், கடற்படையைச் சேர்ந்த 42 பேர், துபாயிலிருந்து வந்த ஒருவர், என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (04) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 03 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,797 பேரில் தற்போது 947 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 839 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 56 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading