Local

இலங்கையில் பாரிய போஷாக்கு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு!

இலங்கையில் அடுத்த வருடம் பாரிய போஷாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழு அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எனவே நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படவேண்டும் என அந்த குழு கோரியுள்ளது.

இலங்கையில் தற்போது திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், கோழி உற்பத்தி 12.1 சதவீதமும், கோழி முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தி துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த எச்சரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading